விக்கிமேனியா

விக்கிமேனியா

எசினோ லாரியோ 2016

விக்கி திட்டங்களை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச மாநாடான விக்கிமேனியா 2016-இல் கலந்துகொள்வதற்கான உதவித்தொகை விண்ணப்பம் இது. மாநாட்டிற்கான பதிவுக் கட்டணம், தங்கும் விடுதி, எசினோ லாரியோவில் ஜூன் 21-28, 2016-இல் நடக்கும் விக்கிமேனியாவிற்கு வந்து போகும் இருவழிப் போக்குவரத்து ஆகிய செலவுகளுக்கான ஊக்க உதவித்தொகை தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பங்கள், எந்த மொழியிலும் சமர்ப்பிக்கப்படலாம், எனினும் ஆங்கிலத்தை முதன்மையாகக் கொண்டு நடக்கும் மாநாடான விக்கிமேனியாவில் பங்கேற்கத் தேவையான ஆங்கில மொழித் திறனுக்கான சான்றினையும் விண்ணப்பதாரர் வழங்க வேண்டும். போதிய அளவிலான ஆங்கில மொழித் திறனை விண்ணப்பத்தின் வாயிலாகவோ அல்லது வேறு ஏதேனும் வாயிலாகவோ மெய்ப்பிக்கலாம்.

இது பல்கலைக் கழக படிப்பிற்கான உதவித்தொகை அன்று. மாநாட்டிற்குச் சிறிதும் தொடர்பற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விக்கிமேனியாவில் பங்குபெறுவதற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முன், தயவு கூர்ந்து தங்களின் பணத்தேவையின் இன்றியமையாமையை கவனமாக ஆராயவும். குறித்த அளவு மட்டுமே நிதி உள்ளது என்பதையும், பல விண்ணப்பதாரர்களுக்கு விக்கிமேனியாவில் பங்குகொள்ள இவ்வுதவித்தொகையைத் தவிர, போதிய பணமீட்டும் வேறு வாய்ப்புகளில்லை என்பதையும் கருத்தில் கொள்க. நன்றி.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தங்களுக்கு 10-நிமிடத்திற்கும் மேலான நேரமாகும் எனில், தங்களின் பதில்களை உரை பதிப்பியில்(text editor) வரைந்து கொண்டு, இப்பக்கத்தை புதுப்பித்துப் பின் தங்கள் பதில்களை தக்க அடைப்புகளில் நகலெடுத்து ஒட்டி சமர்ப்பிக்கவும். 15 நிமிடங்களுக்கும் மேலாக இப்பக்கம் சமர்ப்பிக்கப்படாமல் கிடப்பில் இருந்தால் "Missing or invalid CSRF token" என்ற பிழை அறிவிப்பு தோன்றும், என்பதைக் கவனத்தில் கொள்ளவும்

விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 09, 2016, 23:59 ஒ.ச.நே .

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உதவித்தொகை வகை
 
 
தொடர்பு விவரம்
தனிப்பட்ட விவரம்
 
   
விக்கிமீடியா திட்டங்களில் ஏற்ற பங்குகள்/ ஆற்றிய பணிகள்
 
 
விக்கிமேனியாவில் கலந்துகொண்டவைகளும் ஈடுபாடுகளும்
 
 
விண்ணப்ப ஒப்பந்தம்
தனியுரிமை

இவ்விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் விக்கிமேனியா உதவிக்கொடை குழும உறுப்பினர்களால் தணிக்கை செய்யப்படும். அனைத்துத் தனிப்பட்டத் தகவல்களும் இக்குழுமத்தாலும் விக்கிமீடியா அமைப்பாலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

விண்ணப்பதாரர் உரிமைகள் & தரவுப் பகுப்பாய்விற்கும் பரிமாற்றத்திற்குமான ஒப்புதல்

எசினோ லாரியோ (இத்தாலி)-இல் நடைபெறும் 2016 விக்கிமேனியா மாநாட்டிற்கான விக்கிமீடியா அமைப்பு உதவிக்கொடையின் விண்ணப்பதாரர் என்கிற முறையில், நான் கீழ்காண்பவற்றை, 2016 விக்கிமேனியா உதவிக்கொடைக்கான எனது விண்ணப்பத்தைக் கருதுவதற்கான முன்நிபந்தனைகளாக ஒப்புக்கொண்டு உடன்பட இசைகிறேன்.

(அ) எனது விண்ணப்பதை மதிப்பிடும் பொருட்டு அதன் பகுதியாகவே தொடர்பாகவோ (கூட்டாக 'என் தகவல்கள்') வழங்கப்படும் தனிப்பட்ட முக்கியத் தகவல்கள் (i) விக்கிமீடியா அமைப்பு; (ii) விக்கிமீடியா அத்தியாயம் அல்லது விக்கிமீடியா கருப்பொருள்-சார் அமைப்பு வழங்கும் உதவிக்கொடைக்காகக் கருதப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீராயின் https://wikimania2016.wikimedia.org/wiki/Scholarship_committee ('உதவிக்கொடை குழுமம்') என்ற இணைப்பில் காணலாகும் பட்டியலில் காணப்படுவதுபோன்ற விக்கிமீடியா இயக்கங்களின் உறுப்பினர்களால் ஆன உதவிக்கொடை குழுமத்தின் உறுப்பினர்கள், (iii) https://meta.wikimedia.org/wiki/Wikimedia_chapters ('விக்கிமீடியா அத்தியாயங்கள்') என்ற இணைப்பில் காணப்படுவது போன்ற அதிகாரப்பூர்வ விக்கிமீடியா அத்தியாயங்கள், மற்றும் https://meta.wikimedia.org/wiki/Wikimedia_thematic_organizations ('விக்கிமீடியா கருப்பொருள்-சார் அமைப்புகள்') என்ற இணைப்பில் காணலாவது போன்ற அதிகாரப்பூர்வ கருப்பொருள் சார் அமைப்புகள் ஆகியோர்களால் எடுத்தாளப்பட்டு மதிப்பிடப்படலாம்.

(ஆ) எனது விண்ணப்பத்தின் பகுதியாகவோ அதன் தொடர்பாகவோ சமர்ப்பிக்கும் எந்தத் தரவுகளையும் (i) விக்கிமீடியா அமைப்பு; (ii) விக்கிமீடியா அத்தியாயம் அல்லது விக்கிமீடியா கருப்பொருள்-சார் அமைப்பு வழங்கும் உதவிக்கொடைக்காகக் கருதப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீராயின் உதவிக்கொடை குழுமத்தின் உறுப்பினர்கள், (iii) விக்கிமீடியா அத்தியாயங்கள், மற்றும் விக்கிமீடியா கருப்பொருள்-சார் அமைப்புகள் ஆகியோரால் ஈட்டவோ, சேமிக்கவோ, மாற்றவோ, பரிமாறவோ, காக்கவோ, அழிக்கவோ, வேறு எவ்வித செய்முறைக்குள்ளாக்கவோ படலாம். நான் விக்கிமீடியா அமைப்பிடம் எனது தரவுகளை அழிக்க எழுத்துவடிவில் வேண்டாத வரையிலோ அல்லது இது தொடர்புடைய சட்டத்தால் வேண்டப்படும் கால அளவு வரையிலோ எனது தரவுகள் தக்கவைக்கப்படலாம்.

(இ) எனது தரவுகள் (i) ஐக்கிய அமெரிக்காவிலுள்ள விக்கிமீடியா அமைப்பு; (ii) விக்கிமீடியா அத்தியாயம் அல்லது விக்கிமீடியா கருப்பொருள்-சார் அமைப்பு வழங்கும் உதவிக்கொடைக்காகக் கருதப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீராயின் உதவிக்கொடை குழுமத்தின் உறுப்பினர்கள் வாழும் நாடு, (iii) விக்கிமீடியா அத்தியாயங்கள், மற்றும் விக்கிமீடியா கருப்பொருள்-சார் அமைப்புகள் உறையும் நாடு ஆகியவற்றிலிருந்தும் ஆகியவற்றிற்கும் பரிமாறப்படலாம்.